போரை தொடரவே விரும்புகிறார் புடின்: ஜெலென்ஸ்கி முன்வைத்த குற்றச்சாட்டு
Putin not ready for peace. Zelenskyy stated: ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடரவே விரும்புகிறார் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
போரை தொடர விரும்பும் புடின்
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திங்கட்கிழமை தெரிவித்த கருத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் போரை தொடரவே விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் சர்வதேச கூட்டாளி நாடுகளின் உளவுத்துறை அறிக்கைகளும் இந்த தகவலை தான் உறுதிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி X தளத்தில் வெளியிட்ட பதிவில், ரஷ்ய தலைவர்களுக்கும்,, ரஷ்யாவில் வாழும் பொதுமக்களுக்கும் இடையே மிகப்பெரிய கருத்து வித்தியாசம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய பொதுமக்கள் பெரும்பாலானோர் போரை முடிவுக்கு கொண்டு வரவே விரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
எனவே மாஸ்கோ தலைமையும், புடினின் மனநிலையும் போரை கைவிட்டு விட்டு அமைதியை நோக்கி திரும்ப வேண்டும் என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா அதிபரின் பிரதிநிதிகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ஜெலென்ஸ்கி, செப்டம்பரில் அதற்கான குறிப்பிடத்தக்க ராஜதந்திர மாற்றங்கள் இருக்க கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |