ஈரானின் 11-டன் யுரேனியம்... ட்ரம்புக்கு உதவ முன்வந்த ரஷ்ய ஜனாதிபதி புடின்
ஈரானின் யுரேனியம் தொடர்பில் உதவ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்வந்ததாக இரு தலைவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலை அடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.
உதவியை மறுத்துவிட்டதாக
அநேகமாக, ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவதற்கான முன்மொழிவைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அந்த உதவியை மறுத்துவிட்டதாகவும், அதற்குப் பதிலாக உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றே பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அணுசக்தி முகமையும், அணு ஆயுத மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமான யுரேனியம் கையிருப்பை ஈரானிடமிருந்து அகற்றுவதற்கு ரஷ்யா தயாராக உள்ளது என்றே தெரிவித்துள்ளது.
ஈரானிடம் இருக்கும் யுரேனியம் கையிருப்பு காரணமாகவே தாம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஈரான் 22,000 பவுண்டுகள், அதாவது 11 டன், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் குவித்து வைத்துள்ளது.
குண்டுவீச்சுக்கு உள்ளானது
ஆனால், ஈரானிய கையிருப்பில் உள்ள யுரேனியத்தின் நிலை என்னவென்பது மர்மமாகவே உள்ளது. இருப்பினும், அந்தக் கையிருப்பின் பெரும்பகுதி, அநேகமாக தற்போதும் ஈரான் தனது இஸ்ஃபஹான் அணுசக்தி வளாகத்திலேயே வைத்திருப்பதாக IAEA கருதுகிறது.
இப்பகுதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களால் குண்டுவீச்சுக்கு உள்ளானது மற்றும் இந்த ஆண்டு நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்த தீவிரம் கொண்ட தாக்குதல்களையும் எதிர்கொண்டது.

யுரேனியத்தால் நகரங்களைக் கட்டவும் அழிக்கவும் முடியும். குறைந்த செறிவுகளில், அது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது, ஆனால் அதிக செறிவுகளில், அது மிகவும் அழிவுகரமான ஆயுதமாக மாறுகிறது. இந்தத் திட்டம் குடிமைப் பயன்பாடுகளுக்கு மட்டுமே என்று ஈரான் வலியுறுத்தி வந்தபோதிலும், ஈரான் தனது யுரேனியக் கையிருப்பை ஏறக்குறைய ஆயுதத் தரம் வாய்ந்த நிலைக்குச் செறிவூட்டியுள்ளது என்றே கூறபப்டுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |