உக்ரைனின் அந்த முடிவு... பிரித்தானியாவுக்கு எதிராக திரும்பும் ரஷ்யா: அணுகுண்டு சோதனைக்கும் வாய்ப்பு
ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அனுமதி அளிக்கும் என்றால் விளாடிமிர் புடினின் திட்டம் என்ன என்பது குறித்து நிபுணர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு எதிராக
பெரும்பாலும், விளாடிமிர் புடின் தனது கோபத்தை பிரித்தானியாவுக்கு எதிராக திருப்புவார் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். மட்டுமின்றி தனது நோக்கத்தைக் காட்ட அணுகுண்டு சோதனை நடத்துவதும் புடினின் திட்டமாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
உக்ரைன் தொடர்பில் கிழக்கு-மேற்கு பதட்டங்கள் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்திற்கு நகர்வதாக கூறுகின்றனர். இதன் ஒருபகுதியாகவே பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளதை குறிப்பிடுகின்றனர்.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் ATACMS அல்லது பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைகளை பயன்படுத்தும் அனுமதி அளிக்க வேண்டுமா என்பது தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்படியான ஒரு முடிவு எட்டப்படும் என்றால், அது ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் போரிடுவதற்கு நிகரானது என விளாடிமிர் புடின் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேற்கத்திய நாடுகள்
மேலும், இந்த விவகாரத்தில் உரிய பதிலளிக்கப்படும் என்றும் புடின் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளை அச்சுறுத்த விளாடிமிர் புடின் புதிய அணு ஆயுத சோதனையை முன்னெடுக்கலாம் என்றும் நிபுணர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
மேலும், லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் மூடப்பட வாய்ப்புள்ளதுடன், ரஷ்யா அருகே அமைந்துள்ள பிரித்தானிய ராணுவ தளவாடங்கள் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்றும் கூறுகின்றனர்.
அத்துடன் Storm Shadow ஏவுகணைகளுடன் ருமேனியா மற்றும் போலந்தில் தரையிறங்கும் விமானங்களும் ரஷ்யாவின் இலக்காக மாறலாம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் உக்ரைன் மீது உக்கிர தாக்குதலை மீண்டும் ரஷ்யா முன்னெடுக்கலாம் என்றும் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விளாடிமிர் புடின் தொடர்பில் நன்கு தெரிந்து வைத்திருக்கும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் ஆதரவாக தவறான முடிவெடுக்க வாய்ப்பில்லை என்றே தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |