உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தம்: புடின் உத்தரவு
Putin orders hold strikes on ukraine 3 days: உக்ரைன் மீதான தாக்குதல்களை மூன்று நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க தூதர்களின் வருகையைத் தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மூன்று நாட்களுக்கு உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க தூதர்கள்
உக்ரைன் அமைதி முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா வந்தடைந்தனர். சிறப்பு பிரதிநிதியான கிரில் டிமித்ரியேவ் அவர்களை வரவேற்றார்.

பின்னர் அவர்களது வாகன அணிவகுப்பு அரசுக்கு சொந்தமான விமான நிலையத்தில் இருந்து நகரை நோக்கி புறப்பட்டுச் சென்றது.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவர்களை சனிக்கிழமை சந்திப்பார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை முதல் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு மூன்று நாட்கள் இடைநிறுத்தம் செய்ய புடின் உத்தரவிட்டுள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |