நடமாடும் தகன மேடைகளை வாங்கிக் குவிக்கும் விளாடிமிர் புடின்: கசிந்த அதிர்ச்சி பின்னணி
சீனாவிடம் இருந்து 21 நடமாடும் தகன மேடைகள் வாங்க ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், உக்ரைன் போரில் அந்த நாட்டின் இறப்பு எண்ணிக்கை மிக விரைவில் 220,000 கடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இழப்புகளை மூடிமறைக்க
குறித்த தகன அறைகளை துருப்புகளுடன் சேர்ந்து அனுப்பி வைக்கவும், இதனால் பொதுமக்களிடமிருந்து ரஷ்யாவின் போர் இழப்புகளை மூடிமறைக்கும் முயற்சியில் புடின் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

credit: east2west news
உக்ரைன் போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்காமல், களத்திலேயே தகனம் செய்யும் திட்டம் இதுவெனவும், இதனால், இறப்பு எண்ணிக்கை ஒருபோதும் வெளிவராது என்றே கூறப்படுகிறது.
சீனாவிடம் ஒப்பந்தம்
இதுவரை கொல்லப்பட்ட ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கையானது எதிர்வரும் மே 1ம் திகதி 220,000 என எட்டும் என்று கூறுகின்றனர். மேலும், ரஷ்ய தயாரிப்பான நடமாடும் தகன அறைகளை ஏற்கனவே துருப்புகளுடன் அனுப்பி வைத்துள்ளதாகவும், 21 தகன அறைகளுக்கு சீனாவிடம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

credit: east2west news
மேலும், மிக விரைவில் அந்த தகன அறைகளை சீனா வழங்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
ரஷ்ய துருப்புகள் அதிக எண்ணிக்கையில் பலியாவது புடின் நிர்வாகத்தை பாதிக்கவில்லை எனவும், ஆனால் பொதுமக்கள் இது தொடர்பில் கவலை கொண்டுள்ளதாக தனியார் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        