ரஷ்யா உக்ரைனை வேகமாக ஆக்கிரமிக்க இதை செய்யுங்கள்: புடின் அதிரடி அறிவிப்பு
உக்ரைனில் ரஷ்யாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில், உடனே ரஷ்ய குடிமக்களை குடியேற்றுங்கள் எனவும், மற்றும் எல்லையை பலப்படுத்துங்கள் எனவும் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரைனில் ஆக்கிரமிப்பு
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், உக்ரைனின் சில முக்கிய பகுதிகள் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது மாஸ்கோ கட்டுப்பாட்டில் உள்ள உக்ரேனிய பிராந்தியங்களுக்குள், ரஷ்ய ராணுவம் மற்றும் பொது மக்கள் நடமாட்டத்தை வேகமாக உறுதி செய்ய வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
@reuters
ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் (FSB) கிளையான எல்லைக் காவலர் தின விடுமுறையில், எல்லை சேவைக்கு வாழ்த்துச் செய்தியை கூறிய புடின், ரஷ்யாவால் உக்ரைனில் கைப்பற்ற இடங்களின் எல்லைகளை உக்ரைன் மறைக்க முயல்வதாக கூறியுள்ளார்.
@reuters
மேலும் சமீபத்திய வாரங்களில் ரஷ்யாவிற்குள் உக்ரைனின் தாக்குதல் தீவிரமடைந்திருப்பதாகவும், முக்கியமாக எல்லைகளில் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
உக்ரைனின் தாக்குதல்
இந்நிலையில் உக்ரைனிலுள்ள ரஷ்ய கூட்டமைப்பின் புதிய குடிமக்களுக்கு அனுப்பப்படும் உணவு, மனிதாபிமான உதவி கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட இராணுவ மற்றும் சிவிலியன் வாகனங்கள் மற்றும் சரக்குகள் அனுப்பும் பணியை வேகமாக தொடர வேண்டும்" என்று புடின் கிரெம்ளினின் டெலிகிராம் செய்தி சேனலில் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளார்.
@ap
உக்ரைனில் உள்ள கேர்சோன், ஜபோரிஜிஜியா, லுஹான்ஸ்க் மற்றும் டோனெஸ்க் ஆகிய நான்கு பகுதிகளை, ரஷ்யா ஆக்கிரமித்துள்ளதாக புடின் கடந்த செம்டம்பர் மாதம் அறிவித்திருந்தார்.
ஆனால் அந்த பிராந்தியங்களில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவிற்குள்ளும், உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீதான தாக்குதல்களுக்கு கிய்வ் பகிரங்கமாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் ரஷ்யாவின் உள்கட்டமைப்பை அழிப்பது, உக்ரைனின் திட்டமிட்ட தரை தாக்குதலுக்கான தயாரிப்பு என்று புடின் தெரிவித்துள்ளார்.