அடுத்தகட்டத்திற்கு தயாராகும் விளாடிமிர் புடின்: எச்சரிக்கும் அமெரிக்க உளவுத்துறை
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் வெற்றி பெற்றாலும், போர் முடிவுக்கு வராது எனவும், விளாடிமிர் புடின் உக்ரைனில் நீண்ட கால போருக்கு தயாராகி வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைன் கிழக்கில் ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். அப்பகுதியை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா போரிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன சூழலில் ரஷ்யாவின் கவனம் மொத்தம் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதுடன் உக்ரைன் மீதான படையெடுப்பை விளாடிமிர் புடின் கைவிடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள தேசிய உளவுத்துறையின் இயக்குனர் அவ்ரில் ஹெய்ன்ஸ்,
ஆனால் விளாடிமிர் புடினின் லட்சியங்களுக்கும் ரஷ்ய இராணுவத்தின் தற்போதைய நிலைக்கும் பெரும் இடைவெளி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, ரஷ்யா கைப்பற்றியதாக கூறப்பட்ட நான்கு முக்கிய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி, கார்கிவ் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்றுவதில் உக்ரைன் படிப்படியாக வெற்றி கண்டுவருவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.