ரஷ்ய அணு ஆயுத தடுப்புப் படைகளை உயர் எச்சரிக்கையாக இருக்குமாறு புடின் உத்தரவு!
ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படைகளை உயர் எஎச்சரிக்கையாக இருக்குமாறு அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் எச்சரிக்கையை மீறி, கடந்த 24ம் திகதி முதல் தொடர்ந்து 4வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருாளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்நிலையில், இன்று தலைநகர் கிரெம்ளினில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் Shoigu மற்றும் ரஷ்ய ஜெனரல் Valery Gerasimov உடன் அதிபர் புடின் சந்திப்பில் ஈடுபட்டார்.
இதன்போது, மேற்கத்திய நாடுகள் நமது நாட்டிற்கு எதிராக நட்பற்ற பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமல்லாமல், முக்கிய நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நம் நாட்டைப் பற்றி ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
எனவே ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படைகளை சிறப்புக் கடமைக்கு மாற்ற உத்தரவிடுகிறேன் என புடின் தெரிவித்துள்ளார்.
அதாவது, ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படைகளை உயர் எச்சரிக்கையுடன் வைத்திருக்குமாறு இராணுவத்திற்கு புடின் உத்தரவிட்டுள்ளார்.