ஐரோப்பாவின் மனித சித்திரவதை தடுப்பு மாநாட்டில் இருந்து விலகும் ரஷ்யா: புடினின் அதிரடி திட்டம்!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐரோப்பாவின் முக்கிய மாநாட்டு கூட்டமைப்பில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒப்பந்தத்திலிருந்து புடின் விலகல்
ஜனாதிபதி விளாடிமிர் புடின், சித்திரவதை மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தைகளை தடுக்கும் ஐரோப்பிய மாநாட்டு கூட்டமைப்பிலிருந்து விலகுவதற்கான மசோதாவை ரஷ்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கை காரணமாக ஐரோப்பிய கவுன்சில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு புடின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனிதர்களை கொடுமைப்படுத்துவதில் இருந்து ஐரோப்பிய கவுன்சிலால் இந்த மாநாடு 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
அதன்படி, இதன் உறுப்பு நாடுகளின் சிறைச்சாலையில் மாநாட்டுக் குழுவினர் ஆய்வு செய்து நெரிசல் மற்றும் மனித சித்திரவதை தடுப்பு நடவடிக்கைகள் ஆராய்ந்து பாதுகாப்பை உறுதி செய்யும்.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் இந்த மாநாட்டு கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து இருப்பது, ஐரோப்பிய மனித உரிமை கட்டமைப்பிலிருந்து ரஷ்யா மேலும் விலகுவதை உறுதி செய்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |