இந்தியா வந்த புடின் - 2 பில்லியன் டொலருக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம்
புடின் இந்தியா வந்துள்ள நிலையில், ரஷ்யா உடன் 2 பில்லியன் டொலருக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வந்த புடின்
ரஷ்யா ஜனாதிபதி புடின் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த புடினை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

புடினுக்கு பிரதமர் மோடியின் இல்லத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புடினின் வருகையையொட்டி டெல்லி முழுவதும்.பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வருகையின் போது இந்தியா மற்றும் ரஷ்யா இடையே பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகிய 3 முக்கிய துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
2 பில்லியன் டொலருக்கு குத்தகை
இந்நிலையில், ரஷ்யாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டுகளுக்கு, 2 பில்லியன் டொலருக்கு இந்தியா குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில், புடினின் வருகைக்கு முன்னதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் படி, இந்த கப்பலை போரின் போது பயன்படுத்த முடியாது. மாறாக இந்திய கடற்படையினருக்கு பயிற்சி அளிக்கவும், அணுசக்தி படகு செயல்பாடுகளை மேம்படுத்தவும் இது உதவும்.
உள்நாட்டு உற்பத்தியின் காலதாமதத்தை ஈடு செய்யவும், கடற்படையினருக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காகவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் அவசியம் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |