இலக்கை அடையாமல்... உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பில் அடம்பிடிக்கும் புடின்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனுடனான சமாதான தீர்வுக்கு தயாராக உள்ளார் என்றும், ஆனால் ரஷ்யாவின் முக்கிய நோக்கம் அதன் இலக்குகளை அடைவதாகும் என்றும் ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
சமாதான ஒப்பந்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில நேரங்களில் கடுமையான சொல்லாடல்களுக்கு உலகம் தற்போது பழகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ள பெஸ்கோவ், ஆனால் ரஷ்யா குறித்த கருத்துக்களில் ட்ரம்ப் ஒரு சமாதான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார் என்பதையும் பெஸ்கோவ் பதிவு செய்துள்ளார்.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் விரைவில் ஒரு அமைதியான முடிவுக்கு வர தனது விருப்பத்தை ஜனாதிபதி புடின் பலமுறை கூறியுள்ளதாக கூறும் பெஸ்கோவ், இது ஒரு நீண்ட செயல்முறை, இதற்கு முயற்சி தேவை, மேலும் இது எளிதானது அல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.
உண்மையில் ரஷ்யாவிற்கு இலக்குகள் உண்டு என குறிப்பிட்டுள்ள பெஸ்கோவ், அதில் ஜனாதிபதி புடின் தெளிவாக உள்ளார் என்றும், அந்த இலக்கை எட்டாமல் பேச்சுவார்த்தை முடிவுக்கு வராது என்றும் பெஸ்கோவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
திங்களன்று, ரஷ்யா மீது கடுமையான நிலைப்பாட்டை ட்ரம்ப் அறிவித்தார், பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உட்பட உக்ரைனுக்கு ஒரு புதிய தொகுப்பு இராணுவ உதவியை உறுதியளித்துள்ளார்.
மேலும், போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது கூடுதல் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யாவிற்கு 50 நாள் காலக்கெடுவையும் அவர் விதித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |