உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை வெளியேற்ற தயார்: ஜெர்மன், பிரான்ஸ் தலைவர்களிடம் புடின் தெரிவிப்பு
உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய தொடங்குவது பற்றி விவாதிக்க ரஷ்யா தயாரக இருப்பதாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்களுடன் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடலின் போது ஜனாதிபதி புடின் தெரிவித்தாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
உக்ரைன் ரஷ்யா போரானது கிட்டதட்ட 93வது நாளாக தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்ய படைகள் முற்றிலுமாக சிறைப்பிடித்து தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனும் தான் உலகளாவிய கோதுமை விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. இதனால் உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதிலும் உக்ரைன் தான் சோளம் மற்றும் சூரியகாந்தி எண்ணெயின் முக்கிய ஏற்றுமதியாளராக உலகளாவிய அளவில் திகழ்கிறது.
இத்துடன் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் ரஷ்யாவின் உரங்களின் ஏற்றுமதியும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் ரஷ்யா தான் உலகளாவிய அளவில் உர ஏற்றுமதியில் முதன்மை நாடாக திகழ்கிறது.
இந்தநிலையில், உக்ரைனில் இருந்து உணவு தானியங்களை எத்தகைய தடையும் இன்றி ஏற்றுமதி செய்வது தொடர்பான விருப்பங்களை கண்டறிய ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது
ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை நீக்கினால் மட்டுமே உக்ரைனில் இருந்து உணவு தானிய பொருள்களை ஏற்றுமதியை அதிகரிக்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் ஆகியோரிடம் ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: காபி போடுவதற்கு பால் வாங்க கடைக்கு சென்று கோடீஸ்வரனாக திரும்பிய இளைஞன்! நடந்த நம்பமுடியாத ஆச்சரியம்
மேலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளே உலகளாவிய உணவு பொருள்களின் தட்டுபாடு, எண்ணெய்கள், எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்விற்கு காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.