ரஷ்யா எடுத்துள்ள புதிய முடிவால் திருப்பம்: ட்ரம்பால் பேரிழப்பை அடையவிருக்கும் உக்ரைன்
உக்ரைன் போர் முடிவுக்கு வருவது தொடர்பில் டொனால்டு ட்ரம்புடன் வெளிப்படையான ஒப்பந்தத்திற்கு விளாடிமிர் புடின் தயார் என தகவல் கசிந்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு தயார்
ஆனால் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவைதை கைவிடுவது உட்பட கடும் நிபந்தனைகளை முன்வைக்க புடின் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறார். பதவிக்கு வந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் போரினை முடிவுக்கு கொண்டுவர இருப்பதாகவும் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.
இந்த நிலையிலேயே புடின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் எனற தகவல் கசிந்துள்ளது. 24 மணி நேரத்தில் உக்ரைன் போரை நிறுத்துவது தமது கௌரவ பிரச்சினை என ட்ரம்ப் கருத வாய்ப்பிருப்பதால், அந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள விளாடிமிர் புடின் தயாராகி வருகிறார்.
இதனால் போர் தொடர்பில் ட்ரம்ப் முன்னெடுக்கும் எந்த ஒப்பந்தமும் அது உக்ரைனுக்கு பேரிழப்பாக முடியும். இராணுவத்தை புடின் திரும்பப் பெறலாம் ஆனால் கைப்பற்றிய பிரதேசங்களை எந்த காரணத்தாலும் புடின் விட்டுத்தர வாய்ப்பில்லை என்றே ரஷ்ய அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.
நான்கு கிழக்குப் பிராந்தியங்கள்
மட்டுமின்றி சமீபத்திய நாட்களில் புடின் இராணுவம் உக்ரைனின் கிழக்கு பிரதேசத்தில் பல கிராமங்களைக் கைப்பற்றி வருகிறது. மேலும் உக்ரைன் வசமிருந்து கைப்பற்றியுள்ள Donetsk, Luhansk, Zaporizhzhia மற்றும் Kherson பகுதிகள் தொடர்பிலும் புடின் விவாதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
நான்கு கிழக்குப் பிராந்தியங்கள் முழுவதுமாக ரஷ்யாவின் பகுதி என ஏற்கனவே புடின் நிர்வாகம் உரிமை கோரத்தொடங்கியுள்ளது.
புடினின் நிபந்தனைகளை ஏற்க உக்ரைன் மறுத்து வெளியேறினால், டொனால்டு ட்ரம்ப் அரசாங்கம் உக்ரைனை மொத்தமாக கைவிடும். அது போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |