உக்ரைனிலிருந்து பிரிந்த பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரித்தார் புடின்! போர் மூளும் பதற்றம்
கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக ரஷ்யா அங்கீகரிப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நெருக்கடி குறித்து இன்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையில் புடின் இவ்வாறு அறவித்தார்.
2014-ல் உக்ரைனிலிருந்து பிரிந்த Donetsk மற்றும் Luhansk பிராந்தியங்கள் தற்போது ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
சில தினங்களாக உக்ரைன்-ரஷ்யா இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் தங்கள் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீரிக்குமாறு விளாடிமிர் புடினுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் Donetsk மற்றும் Luhansk குடியரசுகளை ரஷ்யா அங்கீகரிக்கும் என்று புடின் கூறினார்.
ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு தொடர்பான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் Donetsk மற்றும் Luhansk பாதுகாப்பதற்காக உக்ரைனுக்குள் ரஷ்யா தனது படைகளை அனுப்ப முடியும்.
புடினின் இந்த அதிரடி நடவடிக்கையால் உக்ரைன்-ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.