70 வயது ரஷ்ய தரைப்படைத் தலைவரை நீக்கிய புடின்
ரஷ்யாவின் தரைப்படைத் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
ஜெனரல் ஒலெக் சல்யுகோ
கடந்த ஆண்டு முதல் ஒரு டசன் இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது ரஷ்ய அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.
அவர்களில் பலர் தனிப்பட்ட லாபத்திற்காக முக்கிய திட்டங்களில் இருந்து பணத்தை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தரைப்படை தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோ (Oleg Salyukov) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) உத்தரவின்படி அவர் பணிநீக்கம் செய்யப்பட்டு, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் துணைத் தலைவராக செயல்படுவார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இராணுவ அணிவகுப்பு
70 வயதாகும் ஒலெக் சல்யுகோ, நாசி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடத்தப்பட்ட, பிரம்மாண்ட வெற்றி தின இராணுவ அணிவகுப்பை நடத்தி வந்தார்.
2014ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் தரைப்படைகளுக்குப் பொறுப்பாக சல்யுகோவ் இருந்தார். சிரிய உள்நாட்டுப் போரிலும், உக்ரைன் போரிலும் ஈடுபடுவதை மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், உக்ரைனில் ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இராணுவ ஸ்தாபனத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கை என்பதை கிரெம்ளின் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |