மோசமடையும் புடினின் உடல் நிலை... இனி கூட்டங்களில் பங்கேற்கமாட்டார் என தகவல்
ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எளிதில் உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம் என எண்ணிய புடின் வெற்றிபெற முடியாததால் என்ன செய்வதென தெரியாமல் தடுமாறி வருகிறார்.
உக்ரைன் ஊடுருவல் தடுமாறி வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதியான புடினுடைய உடல் நிலையும் மோசமடைந்து வருவதால் அவர் இனி கூட்டங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கமாட்டார் என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எளிதாக உக்ரைனைக் கைப்பற்றிவிடலாம் என தப்புக்கணக்குப்போட்ட புடின், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகியும் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது என தடுமாறி வருகிறார்.
Credit: AP
தோல்வியை ஒப்புக்கொள்வதா அல்லது அணு ஆயுதங்களை பிரயோகிப்பதா என முடிவெடுக்க புடின் தடுமாறிவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
புடினுக்கு புற்றுநோய் என்றும், ஆகவே அவருக்கு பதிலாக அவரைப்போலவே தோற்றமளிக்கும் டூப்களை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவைத்துள்ளதாகவும் டெலிகிராம் சேனல் ஒன்று தொடர்ந்து வலியுறுத்திவருவது குறிப்பிடத்தக்கது.
Credit: Twitter
Credit: Twitter/@mrsorokaa