மோசமாகும் புடினுடைய உடல் நிலை... ஆதாரமாக காட்டப்படும் காட்சிகள்
நேற்று ரஷ்யா தனது வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டபோது சாய்ந்து சாய்ந்து நடந்து வந்த புடின், அமரும்போதும் கால்கள் மீது ஒரு போர்வையைப் போட்டுக்கொண்டதை அவரது உடல்நிலையுடன் பொருத்தி அவரது உடல் நிலை மோசமாகிவரலாம் என விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.
நேற்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு, அணிவகுப்பு மரியாதையை ஏற்று மக்கள் முன் உரையாற்றினார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்.
அப்போது, உரையாற்றி விட்டுத் தனது இருகைக்குத் திரும்பும் போதும், வீரர் ஒருவரின் கல்லறையில் மலர் வளையம் ஒன்றை வைக்கச் சென்றபோதும், புடின் சற்றே தாங்கித் தாங்கி நடந்து வருவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
அத்துடன், முதியவர்கள் எல்லாம் கம்பீரமாக அமர்ந்திருக்க, புடின் மட்டும் ஒரு போர்வையை தன் மடி மீது வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இவையெல்லாமே சாதாரணமாக நடந்த விடயங்களாகக் கூட இருக்கலாம். ஆனால், புடினுடைய உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், அவை முக்கியத்துவம் பெற்ற விடயங்களாகிவிடுகின்றன.
ஆம், இரண்டு ஆண்டுகள் முன்பே புடினுக்கு புற்றுநோய் என்றும், அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்றும் செய்திகள் பரவத் தொடங்கின.
2020ஆம் ஆண்டு, புடின் விமர்சகரும், அரசியல் நிபுணருமான Valery Solovei என்பவர், புடினுக்கு பார்க்கின்ஸன் நோய் இருப்பதாக வதந்தி பரப்பத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
எந்த அளவுக்கு வதந்திகள் பரவின என்றால், கிரெம்ளின் மாளிகை வட்டாரம் அந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் அளவுக்கு அவை வேகமாகப் பரவின.
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, அவை மேலும் வலுப்பெற்று உலாவரத் துவங்கியுள்ளன.
இந்நிலையில் தற்போது புடின் தாங்கித் தாங்கி நடக்க, மீண்டும் அவரது உடல் நிலை மோசமாகிவிட்டதாக செய்திகள் வேகமாகப் பரவத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.