கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் புடினுடைய இரகசிய காதலி: நெருங்க விடாமல் தடுத்த பெண் பாதுகாவலர்கள்
மீண்டும் கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படும் புடினுடைய இரகசிய காதலி, பெண் பாதுகாவலர்கள் படை சூழ வலம் வரும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
புடினுடைய இரகசிய காதலி என அழைக்கப்படும் அலீனா (Alina Kabaeva, 39), என்னும் அந்தப் பெண்ணைப்பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அவை உண்மையான செய்திகளா அல்லது வெறும் வதந்திகளா என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
அலீனாவுக்கும் புடினுக்கும் இரகசிய உறவு என்றும், அவர் ஏற்கனவே புடினுடைய இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்குத் தாய் என்றும், அவர் சுவிட்சர்லாந்து அல்லது சைபீரியாவில் தலைமறைவாக இருக்கிறார் என்றும் கூறப்பட்ட நிலையில், ஒருநாள் திடீரென வித்தியாசமான தோற்றத்தில், ரஷ்யாவில் நடைபெற்ற விளையாட்டு தொடர்பிலான நிகழ்ச்சி ஒன்றில் வந்து நின்றார் அவர்.
தற்போது அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்று மீண்டும் ஒரு செய்தி உலாவரும் நிலையில், செயின்ட் பீற்றர்ஸ்பர்கில், ரஷ்ய ஜனாதிபதி புடின் நடத்தும் பொருளாதார மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கும் அலீனா, சீருடையில் இல்லாத பெண் பாதுகாவலர்களுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அலீனாவைக் கண்டதும் ஒரு பெண் அருகில் செல்லமுயன்றபோது, அவரைச் சுற்றி நின்ற பெண்கள், அவரை நெருங்கவிடாமல் தடுத்ததாகவும், அப்போதுதான் அவர்கள் அலீனாவின் பாதுகாவலர்கள் என தனக்கு தெரியவந்ததாகவும், அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.