மறைந்திருப்பதாக கூறப்பட்ட புடினின் இரகசிய காதலி: திடீரென வித்தியாசமான தோற்றத்துடன் ரஷ்யாவில்...
சுவிட்சர்லாந்தில் அல்லது சைபீரிய பதுங்கு குழி ஒன்றில் மறைந்திருப்பதாக கூறப்பட்ட புடினுடைய காதலி, திடீரென புதிய தோற்றத்துடன் ரஷ்யாவில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
புடினுடைய இரகசிய காதலி என்றும், அவரது நான்கு பிள்ளைகளின் தாய் என்றும் கருதப்படும் ஒலிம்பிக் தங்க மங்கையான Alina Kabaeva (38), மாஸ்கோவிலுள்ள ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடல் ஒன்றில் திடீரென தோன்றியுள்ளார்.
முன்பு வெளியான புகைப்படங்களில் இருப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் Alina தோன்றும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், புடினுக்கு அழகியல் சிகிச்சை அளித்த அதே நிபுணரிடம் Alinaவும் அழகியல் சிகிச்சை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
Alinaவும் அவரது பிள்ளைகளும் சுவிட்சர்லாந்தில் அல்லது சைபீரியாவிலுள்ள அணு ஆயுதங்களையும் தாக்குப் பிடிக்கக்கூடிய பதுங்கு குழியில் மறைந்திருப்பதாக கருதப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன், Alinaவை சுவிஸ் அதிகாரிகள் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்றும் அவரை ரஷ்யாவுக்கு நாடுகடத்தவேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், திடீரென அவர் ரஷ்யாவில் தோன்றியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.