காசா பகுதியை பாருங்கள்! உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையும் ஒன்றல்ல - விளாடிமிர் புடின் அதிரடி பதில்
காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலையும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் செய்தியாளர் சந்திப்பில் வேறுபடுத்தியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா மோதல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின் தாங்கள் நடத்தும் தாக்குதலை இராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறார்.
இதேபோல் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் காசா பகுதி தாக்குதலுக்குள்ளாகி வருவதும் சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆண்டு இறுதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய புடின் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
தினமும் 1500 பேர் சேர்ப்பு
அதில், நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் 1,500 பேர் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். புதன்கிழமை மாலை வரை மொத்தம் 4,86,000 வீரர்கள் ரஷ்ய இராணுவத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், ரஷ்ய வீரர்களுக்கு முன் வரிசையில் போதுமான பொருட்கள் இல்லை என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, 'நிலைமை மேம்படவில்லை என்று நீங்கள் கூற முடியாது' என புடின் பதிலளித்தார்.
அத்துடன் ஹமாஸ் குழுவிற்கு எதிரான போரினால் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதையும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையையும் அவர் வேறுபடுத்தினார்.
அவர் கூறும்போது, 'உக்ரைனில் எங்கள் சிறப்பு இராணுவ நடவடிக்கையையும், காசா பகுதியையும் பாருங்கள். வித்தியாசத்தை உணருங்கள்' என குறிப்பிட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைத் தீர்ப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) சிறந்த தலைவராக செயல்படுவதாகவும் புடின் கூறினார்.
AGENCE FRANCE-PRESSE/GETTY IMAGE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |