எனக்கு நெருக்கமானவர்கள் பலரை தாக்கிவிட்டது... தற்போது நானே இப்படி தான் இருக்கிறன்! ரஷ்ய அதிபர் புடின் வெளியிட்ட பரபரப்பு தகவல்
நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் தனிமைப்படுத்தலில் இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் காணொளி கட்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
புடினுக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டு டோஸ் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணொளி காட்சி மூலம் உரையாற்றி புடின், தடுப்பூசி போட்ட எனக்கு நெருங்கிய ஊழியர் உட்பட என் வட்டாரத்தைச் சேர்ந்த பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதால், என்னுடைய தஜிசிஸ்தான் பயணித்தை ஒத்தி வைத்துள்ளேன்.
தொற்றால் பாதிக்கப்பட்ட நெருங்கிய ஊழியருக்கு எதிர்சக்தி அளவு குறைந்துவிட்டது, அவருக்கு booster போடப்பட்டது.
மேலும், கொரோனாவுக்கு எதிராக ஸ்புட்னிக் சிறப்பாக செயல்படுவதாக காட்டுகிறது.
Russian President Vladimir Putin is self-isolating after several members of his entourage fell ill with COVID-19 https://t.co/Mjc9qWuV6o pic.twitter.com/wbOPX7wxZG
— Reuters (@Reuters) September 15, 2021
எனது வட்டாரத்தைச் சேர்ந்த பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக நான் தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்.
புடின் தனிமைப்படுத்தலில் இருந்த படி காணொளி காட்சி மூலம் சந்திப்புகளில் கலந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஒரு வார காலத்திற்கு தனிமைப்படுத்தலில் இருப்பதாக என தகவல்கள் வெளியாகியுள்ளது.