அது ரகசியம்... பிரித்தானியா மீதான தாக்குதல் குறித்த கேள்விக்கு புடின் அளித்த பதில்
Putin says, it's a military secret, whether Russia will strike Britain: ரஷ்யா பிரித்தானியா மீது தாக்குதல் நடத்துமா என்பது ஒரு ராணுவ ரகசியம் என்று கூறியுள்ளார் புடின்.
ரஷ்யாவுக்கு எதிராக போராடிவரும் உக்ரைனில், பிரித்தானிய படைகள் இருக்குமானால், அவர்களும் தாக்குதலுக்குள்ளாவார்கள் என்று கூறியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதியான புடின்
அது ராணுவ ரகசியம்...
ரஷ்ய உக்ரைன் போரில், உக்ரைனுக்கு பிரித்தானியா உதவி வருவது குறித்து புடினிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.

அவர்களுக்கு பதிலளித்த புடின், பிரித்தானியா மட்டும் அல்ல, உக்ரைனில் ரஷ்யாவுக்கெதிராக போராடும் எந்த நாட்டுப் படைவீரர்களும் நமது இலக்குதான் என்று கூறினார்.
அப்போது, ரஷ்யா பிரித்தானியாவைத் தாக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்க, ’அது ரகசியம், அது ஒரு ராணுவ ரகசியம்’ என சீரியஸாக பதிலளித்த புடின், பின் ஒரு மர்மப் புன்னகை புரிவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
சமீபத்தில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பிரித்தானியாவின் ஆதரவைத் தெரிவிப்பதற்காக உக்ரைன் சென்றிருந்தார், பிரித்தானிய பிரதமரான ஆன்டி பர்னாம்.

அப்போது அவர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளுக்கான திட்டங்களை ஜெலன்ஸ்கிக்குக் கொடுத்ததைத் தொடர்ந்தே, பிரித்தானிய தாக்குதல் குறித்து புடின் மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |