ஜெலென்ஸ்கியை சந்திக்க தயார்: ஆனால் புடின் முன்வைத்த முக்கிய நிபந்தனைகள்?
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் நேரடி சந்திப்பு நடத்துவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புடின் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்த சாத்தியக்கூறுகளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதில், இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகே நடைபெற கூடும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் இந்த ராஜதந்திர சந்திப்பானது நடுநிலையான மூன்றாவது நாடொன்றில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா இடையே தற்போது போர் நடவடிக்கைகள் நீடித்து வந்தாலும், இந்த மோதலானது தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சந்திப்பு திட்டத்தின் பின்னணி
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோ தகவல் வெளியிட்டத்தை அடுத்து இந்த பேச்சானது வேகம் எடுத்துள்ளது.
மூன்றாவது தரப்பு தலையீடு இல்லாமல் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோ-விடம் புடின் தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி உண்மையில் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டினால், முதலில் அவரை என்னுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேச சொல்லுங்கள் என புடின் கூறியதாக பிரதமர் ஃபிகோ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |