எனது மரணம் குறித்த வதந்திகள்... சர்வதேச ஊடகவியலாளர்களிடையே மனம் திறந்த புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின், நேற்று வியாழக்கிழமை, கிரெம்ளினில், நான்கு மணி நேரம், சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது, தன்னைக் குறித்த பல விடயங்களை வெளிப்படையாக பேசினார் புடின்.
எனது மரணம் குறித்த வதந்திகள்...
உக்ரைனைக் குறித்த அடுத்த திட்டம், ட்ரம்புடன் சந்திப்பு, தனது பிள்ளைகளைக் குறித்த விடயம் என பல விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் புடின்.
அப்போது, தனது மரணம் குறித்த வதந்திகள் பெரிதுபடுத்தப்படுவதாக வேடிக்கையாக சிரித்தவண்ணம் புடின் தெரிவிக்க, கூடியிருந்தோரும் சிரித்துள்ளார்கள்.
இதற்கிடையில், அவர் குறிப்பிட்டதைப்போலவே, கடந்த ஆண்டே புடின் இறந்துவிட்டதாகவும், அவரைப்போலவே தோற்றமளிக்கும் ஒருவர் பங்கர் ஒன்றிற்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்த குழு ஒன்று, அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதித்துவருவதாகவும், மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக அவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்து முடிவொன்று எடுக்கப்படும் வரை புடினுடைய ‘டூப்’ பங்கரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், முடிவு எடுக்கப்பட்டதும் அவர் அந்த முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் என்றும் General SVR என்னும் டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |