ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளால் பிரித்தானியாவுக்கு புடின் மிரட்டல்... இரவோடு இரவாக ரகசிய கூட்டம்
மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ரகசிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றிற்கு விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணை
உக்கிரமான தாக்குதல்களுக்கு உக்ரைன் தொடர்ந்து தயாராகி வருவதை அடுத்து, தனது மிகவும் ஆபத்தான புதிய Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையை Dnipro மீது ரஷ்யா வீசியது.
ரஷ்யா மேலதிக தாக்குதலுக்கு தயாராகிவரும் நிலையில், புதிய போரில் உலக நாடுகளும் இணையலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இரவோடு இரவாக ரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்கு விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
உலக நாடுகள் போர் பதற்றன் தணிய வேண்டும் என காத்திருக்கும் நிலையில், மிக மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கின்றன.
உக்ரைன் மீது மிக ஆபத்தான, அணு ஆயுதம் பொருத்தக் கூடிய ஏவுகணை ஒன்றை ரஷ்யா வீசியதை அடுத்து அமெரிக்கா தரப்பில் இருந்து கருத்து பரிமாற்றம் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, பிரித்தானியாவின் வலுவான Storm Shadow ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியதை அடுத்து, பிரித்தானியாவுக்கு எதிராகவும் விளாடிமிர் புடின் மிரட்டல் விடுத்திருந்தார்.
பிரித்தானியா ஒருபோதும் ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் முடிவில் இல்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழுத்தமாக தெரிவித்திருந்தும் புடின் மிரட்டல் விடுத்திருந்தார்.
பிரித்தானியா துணையிருக்கும்
மட்டுமின்றி, உக்ரைன் போரில் பிரித்தானியா தற்போது நேரிடையாக களமிறங்கியுள்ளது என்றும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. பிரித்தானியா போருக்கான முடிவில் இல்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர், ஆனால் உக்ரைன் கண்டிப்பாக போரிடும் என்றார்.
காரணம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளது, வெறும் மூன்று நாட்களில் முடித்துவிடுவதாக அறிவித்திருந்த ரஷ்யா தற்போது 1000 நாட்கள் கடந்து போரிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆயிரம் நாட்களின் உக்ரைனின் தியாகத்திற்கு பிரித்தானியா துணையிருக்கும் என்றும், விளாடிமிர் புடினை இந்த போரில் வெல்ல தாங்கள் அனுமதிப்பதாக இல்லை என்றும் கெய்ர் ஸ்டார்மர் பதிவு செய்துள்ளார்.
விளாடிமிர் புடின் தனது ஆக்கிரமிப்பு மனநிலையை மாற்றிக்கொண்டால், போர் இன்றே முடிவுக்கு வந்துவிடும் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |