ஆபத்தான ஏவுகணை சோதனைக்குத் தயாராகும் புடின்: நேட்டோ உளவு விமானங்கள் கண்காணிப்பு
மேற்கு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கையாக, ரகசிய ஏவுகணை சோதனைகளுக்காக ஆர்க்டிக் பெருங்கடலின் ஒரு பெரும் பகுதியை ரஷ்ய ஜனாதிபதி புடின் மூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Burevestnik ஏவுகணை
வடக்கு கடல் பாதையில் கடல் மற்றும் வான்வெளியின் பெரும் பகுதிகளை ஆபத்தானது என்று விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 17 முதல் 30 வரை நேரடி ஏவுகணை மற்றும் ராக்கெட் சோதனை முன்னெடுக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இராணுவ நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கையில், விளாடிமிர் புடின் இந்த முறை, அவரது கனவுத்திட்டமான Burevestnik ஏவுகணையை சோதனைக்கு உட்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
பறக்கும் செர்னோபில் என அடையாளப்படுத்தப்படும் அந்த ஆபத்தான ஏவுகணை சோதனைக்காகவே புடின் நீண்ட காலமாக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Burevestnik ஏவுகணையானது இலக்குகளைத் தாக்குவதற்கு முன் பல நாட்கள் சுற்றி வந்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் க்ரூஸ் ஏவுகணையாகும்.
எவராலும் தடுக்க முடியாத
அற்புதமானது, எவராலும் தடுக்க முடியாத ஆயுதம் என ரஷ்யாவால் கொண்டாடப்படும் இந்த ஏவுகணையானது சோதனையில் தொடர்ச்சியான தாமதங்களையும் மீண்டும் மீண்டும் தோல்விகளையும் சந்தித்துள்ளது.
தற்போது ஆர்க்டிக் பெருங்கடலில் முன்னெடுக்கப்படவிருக்கும் சோதனையில் Burevestnik ஏவுகணை உட்படுத்தப்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், மேற்கத்திய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |