மாஸ்க்வா கப்பல் மூழ்கிய கருங்கடல் பகுதிக்கு அவசரமாக கப்பல்களை அனுப்பும் புடின்: எதற்காக?
மாஸ்க்வா கப்பல் மூழ்கிய இடத்துக்கு புடின் அவசர அவசரமாக கப்பல்களை அனுப்பியுள்ளார் புடின்.
உக்ரைன் தாக்குதலில், ரஷ்யாவின் கௌரவம் மிக்க கப்பலான மாஸ்க்வா என்னும் கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், முதலில் அது கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தால் மூழ்கியதாக ரஷ்யா கூறிவந்தது. பின்னர் ஒருவாரத்திற்கும் மேல் ஆனபிறகே உண்மை நிலையை ஒப்புக்கொண்டது ரஷ்யா.
இந்நிலையில், தற்போது மாஸ்க்வா கப்பல் மூழ்கிய இடத்துக்கு அவசர அவசரமாக கப்பல்களை அனுப்பியுள்ளது ரஷ்யா.
கடலில் மூழ்கிய கப்பல் முதலான விடயங்களை மீட்கும் ரஷ்யாவுக்குச் சொந்தமான Kommuna என்னும் புகழ் பெற்ற மீட்புக் கப்பல் உட்பட, எட்டு கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் மாஸ்க்வா கப்பல் மூழ்கிய இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாஸ்க்வா கப்பலில் இருந்த வெடிக்காத ஏவுகணைகள், கோடிங் கருவிகள் ஆகிய இராணுவ இரகசியங்கள், மேலும் இறந்த படையினரின் உடல்களும் அந்த இடத்தில் கிடைக்கக்கூடும் என்பதால், அவற்றை மீட்பதற்காக அங்கு மீட்புக்கப்பல்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என கடல் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இராணுவ நிபுணரான HI Sutton கூறும்போது, மூழ்கிய மாஸ்க்வா கப்பலிலிருந்து ரேடியோக்கள் மறும் இரகசிய சங்கேத விடயங்கள் மற்றும் ஆயுதங்களை மற்ற நாட்டவர்கள் எடுத்துவிடாமல் தடுப்பதற்காக, அவற்றை மீட்பதற்காக புடின் மீட்புக் கப்பல் குழுவை அனுப்பியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், மாஸ்க்வா கப்பல் 160 அடி ஆழத்தில் உள்ளது. ஆகவே, அதை முழுமையாக மீட்பது கடினம் என்பதால், மாஸ்க்வாவை முழுமையாக மீட்க Kommuna முயலாது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
அப்படி முழுக் கப்பலையும் கடல் மட்டத்திற்கு மேல் கொண்டு வருவது மிகப்பெரிய சவால் என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர், அப்படிச் செய்ய ரஷ்யா ஆர்வம் காட்டுவதாகவும் தெரியவில்லை என்கிறார்.