தனது சொந்த படைவீரர்களையே கொல்ல கொலையாளிகளை அனுப்பியுள்ள புடின்: வெளியாகியுள்ள திடுக் தகவல்
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய வீரர்கள் யாராவது போர் செய்ய மறுத்து தப்பியோட முயற்சிக்கும் பட்சத்தில், அவர்களைக் கொல்ல புடின் கொலையாளிகளை அனுப்பியுள்ளதாக ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது சொந்தப் படைவீரர்களையே கொல்லத் துடிக்கும் புடினுடைய அரக்கத்தனம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதான உள்ளது.
போர் தொடங்கியதிலிருந்தே, உக்ரைனுக்கு வந்த ரஷ்ய வீரர்கள் பலர், புடின் பொய் சொல்லி தங்களை உக்ரைனுக்கு அனுப்பியதாகவும், தாங்கள் போருக்கு வருகிறோம் என்பதே தங்களுக்குத் தெரியாது என்றும் கூறிவந்ததைக் காட்டும் காட்சிகள் வெளியாகின.
அத்துடன், உக்ரைனிலுள்ள பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவர்களைக் காப்பாற்ற முயன்ற ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதை அவர்களது சக வீரர்களே கண்டு திகைத்துப்போன சம்பவங்களும் நடைபெற்றது.
எப்படியாவது போர் செய்யாமல் உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக, தங்கள் கால்களில் தாங்களே சுட்டுக்கொண்ட ரஷ்ய வீரர்களைக் குறித்த செய்திகளும் வெளியாகின.
இன்னொரு பக்கம், போரிட விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர் தங்கள் டாங்குகள், ஆயுதங்களுடன் சரணடைந்து வருகிறார்கள்.
நேற்று, 300 ரஷ்ய வீரர்கள் மேலிட உத்தரவை ஏற்றுக்கொள்ள மறுத்து, போர் உக்கிரமாக நடந்துகொண்டிருந்த இடத்திலிருந்து விலகிச் சென்றதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஆக, இப்படி ரஷ்ய வீரர்களிலேயே ஒரு பகுதியினர் உக்ரைன் ஊடுருவலை மறைமுகமாக எதிர்க்கும் நிலையில், அப்படி தனக்குக் கட்டுப்பட்டு தான் சொன்னதைச் செய்யாமல், போர் செய்ய விரும்பாமல் வெளியேற முயலும் ரஷ்ய வீரர்களைக் கொல்வதற்காக, புடின் கொலையாளிகளை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல, அப்படி போர் செய்ய மறுக்கும் ரஷ்ய வீரர்கள் தப்பியோடுவதை தடுப்பதற்காக, செசன்ய படைகளும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.