போர் தொடர்பான விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்ற இளைஞரை உக்ரைன் போருக்கு அனுப்பிய புடின்... விளைவு?
போர் தொடர்பான விளையாட்டு ஒன்றை சிறப்பாக விளையாடி சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவரை உக்ரைனுக்கு உண்மையாக போர் செய்ய அனுப்பியுள்ளார் புடின்!
ரஷ்யாவில் tank biathlon என்னும் விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவர் Bato Basanov (25).
சென்ற ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu மற்றும் இராணுவத் தலைவரான Valery Gerasimov ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக விளையாடி முந்தைய சாதனைகளை முறியடித்து வெற்றி பெற்று சாம்பியனான அணியில் ஒருவர் அவர்.
விளையாட்டில் வென்ற அவரை நிஜப் போருக்கு அனுப்பியிருக்கிறார் புடின். விளைவு, உக்ரைனில் தனது வாகனம் தாக்கப்பட, பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Basanov.
அந்த தாக்குதலில் உயிரிழந்த தங்கள் பிள்ளைகளின் உடல்களைப் பெற்றுக்கொள்ள வந்துள்ளார்கள் அவர்களுடைய தாய்மார்கள்.
அப்போது ஒரு பெண் மற்றொருவரிடம் கூறினாராம், நீ அதிர்ஷ்டசாலி, உன் மகனுடைய உடல் முழுமையாக கிடைத்திருக்கிறது. எனக்கோ என் மகனுடைய தலையும் இரண்டு கைகளும்தான் கிடைத்திருக்கிறது என்று!