இரகசிய காதலி குறித்த தகவல் கசிந்ததால் தாம் தூமென குதித்த புடின்: கசியவிட்டது யார் தெரியுமா?
தன்னுடைய இரகசிய காதலி குறித்த விடயம் வெளியே கசிந்ததால், கடும் ஆத்திரமடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
புடினுடைய இரகசிய காதலி
தடகள வீராங்கனையாகிய அலீனா (Alina Kabaeva) என்னும் பெண்ணுடன் புடின் இரகசிய வாழ்க்கை நடத்தி வருவதாக நீண்ட காலமாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தை புடின் வெளிப்படையாக இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Image: POOL/AFP via Getty Images
அத்துடன், அலீனாவுக்காகவே Valdai என்னும் ஏரிக்கரையில் பெரிய வீடு ஒன்றைக் கட்டிக்கொடுத்துள்ளாராம் புடின்.
இந்த அலீனாவைக் குறித்து ஊடகங்கள் குறிப்பிடும்போது, அதீத பாலுணர்வு கொண்டவர் என்றே குறிப்பிடுகின்றன.
அலீனா குறித்த இரகசியம் வெளியானதால் ஆத்திரமடைந்த புடின்
நீண்ட காலமாக இரகசியமாக வைத்திருந்த அலீனாவுடனான உறவு குறித்த செய்திகள் வெளியானதால் புடின் கடும் ஆத்திரமடைந்தாராம்.
அதற்கு முன் புடின் அவ்வளவு கோபப்பட்டு யாரும் பார்த்ததில்லை என்கின்றன ஊடகங்கள். இரகசிய உளவுத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகளும், அலீனாவின் தோழிகளும்தான் இந்த இரகசியத்தைக் கசியவிட்டதாக புடின் கருதுகிறார்.
Image: The Asahi Shimbun via Getty Images
அலீனாவையும் புடின் இந்த விடயத்திற்காக கடிந்துகொண்டாராம் புடின், அலீனாவோ, தான் கணவன் இல்லாத மனைவி என்றும், எல்லாம் தானே தனியாகவே செய்துகொள்ளவேண்டும் என்றும் கூறி பதிலுக்கு சண்டை போட்டாராம்.
இருவரும் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொள்ள, கடைசியில் அலீனா கண்ணீர் விட, அதற்குப் பிறகுதான் புடினுடைய ’மூட்’ கொஞ்சம் மாறியதாம்.
ஆனால், அந்த சண்டைக்குப் பிறகுதான் புடினுடைய உடல்நிலை மோசமானது என்கிறது உள்ளூர் ஊடகம் ஒன்று!
Image: Getty Images