புச்சா படுகொலை...கண்டிப்பாக புடின் நரகத்திற்கு செல்வார்: குமுறும் உக்ரைன் அமைச்சர்!
உக்ரைனில் பொதுமக்களை கொன்று குவித்து இருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வார்(go to hell) என அந்தநாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா 6வது வாரமாக போர்த்தாக்குதல் நடத்திவரும் நிலையில், புச்சா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து இருப்பதாக பல்வேறு குற்றசாட்டுகளை ரஷ்யா மீது உலகநாடுகள் முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில், இன்று (செய்வாய்க்கிழமை) உக்ரைனின் புச்சா நகரில் படுகொலை செய்யப்பட்ட இடத்தை மேற்பார்வையிட சென்ற அந்த நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதி புடின் கண்டிப்பாக நரகத்திற்கு செல்வார் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் அத்துமீறியுள்ள நிலையில் ஜனாதிபதி புட்டினுடன் எவ்வாறு உக்ரைன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் என sky news எழுப்பிய கேள்விக்கு டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
உக்ரைனில் போர் குற்றங்களை புரிந்ததற்காக ரஷ்யா மீது வழக்கு தொடர்வது தொடர்பான ஆதாரத்தை உக்ரைன் வழக்குரைஞர்கள் மற்றும் காவல்துறையினர்கள் சேகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, புச்சா நகரில் மட்டும் பல டஜன் கணக்கான பொதுமக்கள் உடல்கள் இருப்பதாகவும், காட்டுப்பகுதிக்குள் இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா ராணுவத்தால் கொல்லப்பட்ட எரிக்கப்பட்ட 6 உடல்களை பார்வையிட்டபிறகு பேசிய டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி இந்த உடல்களில் முகங்கள் சிதைக்கப்பட்டு இருப்பதால் அடையாளம் காணுவதற்கு டிஎன்ஏ ஆய்வகத்தின் உதவி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
நமது கண்முன்னே அப்பாவி உயிர்களின் படுகொலை... ஐநாவில் பிரபல ஐரோப்பிய நாடு வருத்தம்!