நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்! புடின் அதிரடி
எந்தவொரு நிபந்தனைகள் இன்றி உக்ரைன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக புடின் அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம், உக்ரைனுடன் நிபந்தனைகள் ஏதுமின்றி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக இருப்பதாக மாஸ்கோ சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுகுறித்து கூறுகையில், "நேற்று அமெரிக்கத் தூதர் விட்காஃப்புடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, விளாடிமிர் புடின் அவர்கள் உக்ரைனுடன் எந்தவிதமான முன்நிபந்தனைகளும் இல்லாமல் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் இந்த கருத்தை இதற்கு முன்பும் பலமுறை வலியுறுத்தியுள்ளார்" என்று அவர் குறிப்பிட்டு பேசினார்.
இந்த அறிவிப்பு, உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்வியை உலக அரங்கில் எழுப்பியுள்ளது.
டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பு
இந்த சூழ்நிலையில், போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் இருந்தபோது, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர், அமெரிக்க ஜனாதிபதி தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ரஷ்யாவுடனான அணுகுமுறையில் மாற்றம் தேவைப்படலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பதிவிட்டதாவது, "கடந்த சில நாட்களாக புடின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், நகரங்கள் மற்றும் ஊர்களுக்குள் ஏவுகணைகளை வீச எந்த நியாயமான காரணமும் இல்லை. அவர் போரை நிறுத்த விரும்பவில்லை என்றும், என்னை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார் என்றும் தோன்றுகிறது.
எனவே, 'வங்கி' அல்லது 'இரண்டாம் நிலை பொருளாதார தடைகள்' மூலம் அவரை வேறுவிதமாக கையாள வேண்டியிருக்கலாம். அதிகப்படியான மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள்!!!" என பதிவிட்டு இருந்தார்.

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை
முன்னதாக தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, மாஸ்கோ மற்றும் கீவ் இடையே 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த முடியும் என்று அமெரிக்க அதிபர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், அவர் பதவியேற்று மூன்று மாதங்கள் ஆகியும், ரஷ்ய அதிபரிடம் இருந்து படையெடுப்பை நிறுத்துவதற்கான எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |