திடீரென மரியுபோலுக்கு பயணித்த புடின்!
ரஷ்ய ஜனாதிபதி புடின் கிரிமியா பயணத்திற்கு பின் திடீரென மரியுபோலுக்கு சென்றார்.
கைது பிடியாணை
உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களுக்கு புடின் தான் காரணம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது பிடியாணை பிறப்பித்தது.
ஆனால், நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் புடின் திடீரென மரியுபோல் நகருக்கு சென்றுள்ளார்.
@AP
மரியுபோல் கடற்கரை ஆய்வு
ஹெலிகொப்டர் மூலம் வந்தடைந்த புடின், ஒரு கலை பாடசாலை, குழந்தைகள் மையத்தை பார்வையிட்டவுடன், Nevsky microdistrictயில் வசிப்பவர்களை சந்தித்தார்.
மேலும் மரியுபோல் கடற்கரையை ஆய்வு செய்தார். அத்துடன் தனது ராணுவ நடவடிக்கையின் உயர்மட்ட தளபதியை சந்தித்த அவர், பொதுப்பணியாளர்களின் தலைவரான வலேரி ஜெராசிமோவையும் சந்தித்தார்.
@Sputnik
கிரிமியா பயணத்தை முடித்து ஒருநாள் கழித்து மரியுபோலுக்கு புடின் பயணித்துள்ளார்.