ரஷ்ய ஜனாதிபதியாக 5வது முறையாக பதவியேற்ற புடின் விளாடிமிர்
புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக 5வது முறையாக பதவி ஏற்றார்.
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 18ஆம் திகதி, 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பின்னர் புடினின் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரித்தானியா, கனடா நாடுகள் கலந்துகொள்ளவில்லை என்று அறிவித்தன.
இந்த நிலையில், புடின் 5வது முறையாக ரஷ்ய நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். சுமார் 24 ஆண்டுகள் ரஷ்ய ஜனாதிபதியாக இருக்கும் புடினுக்கு, அவரது பாடசாலை ஆசிரியை நேரில் சந்தித்து மலர்க்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |