தமிழ்நாட்டில் முக்கிய திட்டம்; குறைந்த விலையில் மின்சாரம் - புடின் பேச்சு
தமிழ்நாட்டின் கூடங்குள அணுமின் நிலையம் குறித்து புடின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் முக்கிய திட்டம்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின், 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியாவிற்கு வந்துள்ளார்.

இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி உடன், உக்ரைன் போர், எரிபொருள், ராணுவ தளவாடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதில் பேசிய புடின், "வளர்ந்து வரும் இந்தியாவிற்கான எரிபொருள் விநியோகத்தை தொடர ரஷ்யா தயாராக உள்ளது. மிகப்பெரிய அணுமின் நிலையத்தை கூடங்குளத்தில் உருவாக்க ரஷ்யா உதவி செய்து வருகிறது.

கூடங்குளத்தில் உள்ள 6 அணு உலைகளில், 3 உலைகளுக்கு எரிபொருள் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. 6 அணு உலைகளும் பயன்பாட்டிற்கு வரும் போது, குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்.
Chennai-Vladivostok வழித்தட திட்டத்தால், இந்தியாவில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது" என கூறியுள்ளார்.
கூடங்குள அணுமின் நிலையம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் அங்கு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

2011 ஆம் ஆண்டில், ஜப்பானில் உள்ள புக்குஷிமா டா இச்சி அணுமின் நிலையைத்தில் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஏற்படுத்திய பாதிப்பிற்கு பின்னர், கூடங்குள அணுஉலைக்கு எதிராக மக்கள் இடிந்தக்கரையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் அரசு அணுசக்தி நிறுவனமான ரோஸாட்டம் (Rosatom), 3வது உலைக்கான முதல் தொகுதி அணு எரிபொருளை விநியோகம் செய்துள்ளது.
அசெம்பிளிகள் சரக்கு விமானம் மூலம் எரிபொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ரோஸாட்டம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |