உக்ரைன் பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொண்ட ட்ரம்ப், இந்திய பிரதமர் முதலானோருக்கு நன்றி தெரிவித்த புடின்
உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதற்காக தங்கள் நேரத்தில் பெருமளவை செலவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்திய பிரதமர் மோடி முதலானோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.
ட்ரம்ப், இந்திய பிரதமர் முதலானோருக்கு நன்றி
ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக முதன்முறையாக பேசிய ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்க ஜனாதிபதி புடின், இந்திய பிரதமர் மோடி, பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனேசியா லூலா டா சில்வா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.
முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு எனது நன்றியைத் தெரிவிப்பதுடன் எனது உரையைத் துவங்குகிறேன். உக்ரைன் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தினார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
எல்லா நாடுகளுக்கும் அவரவருக்கு உள்நாட்டுப் பிரச்சினைகள் உள்ளன. என்றாலும், இந்திய பிரதமர், சீன பிரதமர், பிரேசில் ஜனாதிபதி மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி முதலான தலைவர்கள், ரஷ்ய உக்ரைன் விவகாரம் குறித்து பேசி அதை தீர்க்கும் முயற்சிகளுக்காக பெருமளவில் தங்கள் நேரத்தையும் செலவிட்டார்கள்.
அவர்களுடைய ஒரே நோக்கம், பகையையும் உயிர் பலியையும் முடிவுக்குக் கொண்டுவருவதுதான். ஆகவே அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், அவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார் புடின்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |