அண்டை நாடுகள் மீது எந்தவொரு கெட்ட எண்ணமும் இல்லை: ஜனாதிபதி புடின் பேட்டி
ரஷ்யாவிற்கு அதன் அண்டை நாடுகளை பற்றிய எந்தவொரு கெட்ட எண்ணமும் இல்லை என ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன, இருப்பினும் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்துவது குறித்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ பதிவு இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது.
????? Putin: Russia's neighbours should not escalate tensions
— Flaco (@deltoro_flaco) March 5, 2022
"There are no bad intentions towards our neighbours."
#VladimirPutin #Russia #UkraineRussiaWar #україни #Ukraine pic.twitter.com/4H7bO6rjKq
அதில் ரஷ்யாவிற்கு அதன் அண்டை நாடுகளுடன் எந்தவொரு தவறுதலான எண்ணமோ அல்லது கெட்ட எண்ணமோ கிடையாது.
அதேசமயம் ரஷ்யாவின் அண்டை நாடுகள் இந்த இறுக்கமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கவோ அல்லது புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்துக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்களது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுகிறோம், மேலும் அதனை தொடர்ந்து நிறைவேற்றுவோம் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளுடன் எங்களின் நல்லுறவை மோசமடைய செய்வதற்கான எந்தவொரு தேவையும் எங்களுக்கு இல்லை, எங்களின் அனைத்து செயல்களுக்கும், ரஷ்யாவிற்கு எதிரான அண்டை நாடுகளின் தொடர் நடவடிக்கைகளே காரணம் எனவும் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.