உக்ரைன் வைத்த குறி... வெடித்துச் சிதறிய புடினின் 960 மில்லியன் பவுண்டுகள் ஆயுதம்
உக்ரைன் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கை ஒன்றில், விளாடிமிர் புடினின் மிகவும் மதிப்புமிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான S-400 Triumf அழிக்கப்ப்ட்டுள்ளது.
FP-2 ட்ரோன்கள்
குறித்த ஆயுதத்தின் மதிப்பு 960 மில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது. டெலிகிராம் செயலியில் வெளியான காணொளி ஒன்றில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உக்ரைனின் சிறப்புப் படைகளே தொடர்புடையத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. ரஷ்யா ஆக்கிரமித்துள்ள கிரிமியாவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் FP-2 ட்ரோன்களை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலில் S-400 Triumf அமைப்பு ஒன்று மொத்தமாக அழிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உடாச்னே கிராமத்திற்கு அருகே நடந்த தாக்குதலில் ரஷ்யாவின் 18வது ராணுவப் பிரிவிற்கு சொந்தமான ஒரு பெரிய வெடிமருந்து கிடங்கும் இலக்காகியுள்ளது.
92N6E ரேடார் அமைப்பு
S-400 கட்டளை கோபுரத்திற்கான மின்சாரம் வழங்கும் உபகரணங்களும் 92N6E ரேடார் அமைப்பு ஒன்றும் அழிக்கப்பட்டன. அக்டோபர் 6 ஆம் திகதி நடந்த இந்த தாக்குதல் தொடர்பில், பாதுகாப்பு காரணங்களுக்காக தகவல் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.
கிரிமியாவில் உக்ரைனுக்காகப் பணியாற்றும் உளவாளிகள் குழு ரஷ்ய ஆயுதங்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு தகவல் பகிர்ந்துள்ளனர்.

இந்த தாக்குதலை ரஷ்யாவின் இராணுவத்திற்கு அழுத்தம் கொடுக்கவும், தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவர்களின் திறனைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே உக்ரைன் படைகள் குறிப்பிட்டுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |