கவர்ச்சி நடன அறையை தேவாலயமாக மாற்றிய புடின்: வெளியான ரகசிய காட்சிகள்
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்குச் சொந்தமான மாளிகை ஒன்று புதுப்பிக்கப்பட்டுவருவது தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் ரகசியமாக எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஒரு பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான மாளிகை
Credit: East2West
கருங்கடல் பகுதியில், ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு ரகசிய மாளிகை ஒன்று இருப்பதாக பலமுறை செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
Credit: East2West
கட்டுப்பாடுகளை மீறி, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் ரகசியமாக எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, 190,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள அந்த 16 தளங்கள் கொண்ட மாளிகையில் என்னென்ன உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
Credit: East2West
கவர்ச்சி நடன அறையை தேவாலயமாக மாற்றிய புடின்
Credit: East2West
11 படுக்கையறைகள் கொண்ட அந்த மாளிகையில், ஒரு கசினோ, திரையரங்கம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் நீச்சல் குளம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, அந்த மாளிகை புதுப்பிக்கப்பட்டுவரும் நிலையில், அதில் சில மாற்றங்களைச் செய்துள்ளார் புடின். குறிப்பாக, முன்னர் அந்த மாளிகையில் pole-dancing எனப்படும் நடனம் மற்றும் பெண்கள் கவர்ச்சி நடனம் ஆடும் ஒரு அறை இருந்தது.
Credit: East2West
ஆனால், அதை இப்போது ஒரு சிறிய தேவாலயமாக மாற்றியுள்ளார் புடின். சமீப காலமாகவே, மரபுகள் மற்றும் மதம் மீது புடின் அதீத அக்கறை காட்டத்துவங்கியுள்ளதன் வெளிப்பாடே இந்த தேவாலயம் என கருதப்படுகிறது.
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
Credit: East2West
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |