மொத்த அதிகாரத்தையும் உளவுத்துறை தலைவரிடம் ஒப்படைக்கும் புடின்: வெளியான பகீர் காரணம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ள நிலையில், தமது விசுவாசியான உளவுத்துறை தலைவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உடல் நிலை தொடர்பில் நீண்ட நாட்களாக ஊகங்கள் பல வெளியாகி வந்தது. மேலும் அவர், அவர் வயிற்றுப் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோய் பாதிப்பால் கடுமையாக அவதிப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், குறித்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 69 வயதான விளாடிமிர் புடின் இரகசியமாக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து மொத்த அதிகாரத்தையும் அவரது விசுவாசியான உளவுத்துறை தலைவர் Nikolai Patrushev வசம் ஒப்படைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 70 வயதான Nikolai Patrushev தான் உக்ரைன் போருக்கான சூத்திரதாரி.
உக்ரைன் நியோ நாஜிகள் வசம் சிக்கியுள்ளதாகவும், இதனால் ரஷ்யாவுக்கு பேராபத்து ஏற்படும் என விளாடிமிர் புடினை நம்ப வைத்தவரும் இவர்தான். குறித்த தகவல்கள் அனைத்தும் ரஷ்ய ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
இதே ஊடகம் தான் சுமார் 18 மாதம் முன்பு புடின் உடல் நிலை தொடர்பில் சந்தேகம் எழுப்பியிருந்தது. மேலும், முக்கிய தளபதி ஒருவரிடம் அறுவை சிகிச்சை தொடர்பில் விளாடிமிர் புடின் ஆலோசனை மேற்கொண்டதாகவும் இந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
விளாடிமிர் புடினுடன் சுமார் 2 மணி நேரம் தீவிர ஆலோசனை முன்னெடுத்த பின்னரே Nikolai Patrushev ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இது மிக மோசமான முடிவு எனவும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.