ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல்; 355 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்த புடினின் கட்சி
putin united russia party won 355 seats in parliment and retain power: ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில், புடினின் கட்சி 355 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
ஆட்சியை தக்க வைத்த புடினின் கட்சி
ரஷ்யாவின் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி தொடங்கி செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற கீழ் அவையான 450 உறுப்பினர்களைக் கொண்ட டூமாவில், பாதி உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகவும், மீதிப் பாதி உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த தேர்தலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஐக்கிய ரஷ்யா கட்சி 355 இடங்களை வென்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் எல்லா பாம்ஃபிலோவா தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் நேரடியாகப் போட்டியிட்ட 225 இடங்களில், ஐக்கிய ரஷ்யா 208 இடங்களையும், மீதமுள்ள இடங்களை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும் வென்றது.
இதன் மூலம், இது 2016 தேர்தலில் அந்த கட்சி பெற்றிருந்த 343 இடங்கள் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.

மேலும், கடந்த 2021-ஆம் ஆண்டை (49.8%) விட கூடுதல் வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளது.
ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்களுடன் இரண்டாம் இடத்தையும், அதைத் தொடர்ந்து தேசியவாத எல்.டி.பி.ஆர் கட்சி 25 இடங்களையும், புதிய மக்கள் கட்சி 20 இடங்களையும் பிடித்தன.
ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கிய பிறகு நடந்த முதல் தேர்தல் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமைப்பு மூலம் இணைக்கப்பட்ட 4 உக்ரைனிய பகுதிகளில் நடத்தப்பட்ட முதல் தேர்தல் ஆகும்.
முடிவுகளை புறக்கணித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இந்த முடிவுகளை புறக்கணித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், "டூமா தேர்தல்கள் ரஷ்ய ஜனநாயகத்திற்கு மற்றொரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த முடிவுகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டன" என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் காஜா கல்லாஸ் கூறியுள்ளார்.
மேலும், "கிரெம்ளின் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கியது, உக்ரைனில் அதன் போரை எதிர்த்த ஒரே பதிவு செய்யப்பட்ட கட்சியைத் தடுத்தது, மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை வெளியேற்றியது.

உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் இந்த 'தேர்தல்கள்' என்றழைக்கப்படும் தேர்தல்களையோ அல்லது அவற்றின் முடிவுகளையோ ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்காது.
இந்த போலியான தேர்தல்களை ஏற்பாடு செய்வதில் ஈடுபட்டவர்கள், உக்ரைனின் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களாகப் போட்டியிடுபவர்கள், ரஷ்யாவிற்குள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளைச் சீர்குலைப்பவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்துள்ளார்.