புடினுக்கு பிறகு இவரா? ரஷ்யாவின் பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நபர்
நாட்டின் தற்போதைய பிரதமரை மீண்டும் தெரிவு செய்யும் தமது முடிவை ஏற்கும்படி ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழவையில் ஜனாதிபதி புடின் கோரிக்கை வைத்துள்ளார்.
இரண்டாவது முறையாக
ரஷ்ய பிரதமராக பொறுப்பில் இருந்தவர் Mikhail Mishustin. அவரையே இரண்டாவது முறையாக புடின் தெரிவு செய்துள்ளார். Mikhail Mishustin தொடர்பில் இதுவரை பெரிதாக எவரும் பதிவு செய்யாத நிலையில், புடினுக்கு பிறகு ரஷ்யாவை ஆள்பவர் இவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் பரவலாக அறிமுகமாகாத 58 வயதான Mikhail Mishustin உள்ளூர் மக்களுக்கு அவர் பிரதமர் என்பது மட்டுமே தெரியும். 2020 முதல் Mikhail Mishustin ரஷ்யாவின் பிரதமராக இருந்து வருகிறார்.
மட்டுமின்றி, ரஷ்யாவின் வரலாற்றில் முதன்முறையாக பிரதமர் ஒருவர் தமக்கு எதிராக எவரும் வாக்களிக்காமல் உறுதி செய்யப்பட்டுள்ளார். பிரதமர் பதவிக்கு முன்னர் பெடரல் வரி சேவையின் தலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
புடின் பதவி விலக நேர்ந்தால்
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர், மேற்கத்திய நாடுகளின் தடை விதிப்பை அடுத்து, பொருளாதாரத்தை தோய்வின்றி முன்னெடுத்து சென்றவர் Mikhail Mishustin என்றே கூறுகின்றனர்.
நாளை புடின் பதவி விலக நேர்ந்தால், ஜனாதிபதி பொறுப்புக்கும் Mikhail Mishustin பொருத்தமானவர் என்றே கூறப்படுகிறது.
விதிகளின் அடிப்படையில், ஜனாதிபதி ஒருவர் நோய் அல்லது வேறு நெருக்கடிகளால் பதவி விலகினால், புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வரையில் பிரதமரே செயல் ஜனாதிபதியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |