பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி

Ukraine Russian Federation
By Arbin Aug 03, 2026 06:01 AM GMT
Report

ரஷ்ய உணவகம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெடிகுண்டு வெடித்ததில் புடினின் போர்த் தளபதிகளில் ஒருவர் படுகொலை முயற்சியிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 19 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். கிரெம்ளினிலிருந்து ஒரு மைலுக்கும் சற்று அதிகமான தொலைவில் உள்ள குத்ரின்ஸ்கயா சதுக்கத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

பரிசுப்பொருள் என கூரியர் மூலம் அந்த உணவகத்திற்கு வெடிகுண்டு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளிப் படைகளின் தலைமைத் தளபதியும் மூத்த போர் தளபதியுமான அலெக்சாண்டர் சாய்கோவின் 55-வது பிறந்தநாள் கொண்டாட்டம் அந்த உணவகத்தில் நடைபெற்றது.

உள்ளூர் செய்திகளின் அடிப்படையில், அந்தத் தாக்குதலில் தளபதி உயிர் பிழைத்த போதிலும், அவரது மருமகன் கொல்லப்பட்டார் மற்றும் அவரது மகள் பலத்த காயமடைந்தார்.

சுமார் 85,000 பவுண்ட் செலவில் நடைபெற்ற அந்த விருந்து நிகழ்ச்சியில், மாஸ்கோவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், உயர்மட்ட ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்

ஃபிஃபா தலைவரின் மறுதேர்தல்... அதிர்ச்சி கொடுத்த வேல்ஸ் கால்பந்து சங்கம்

வெளியாகியுள்ள தகவலில், வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் மரணமடைந்த இருவரில், முன்னாள் தொழில்முறை ஐஸ் ஹாக்கி வீரரான 27 வயது டேனில் பெரெட்ரியும் (Daniil Peredriy) ஒருவர் எனத் தெரிய வந்துள்ளது.

அந்த வெடிவிபத்தில், அவரது மனைவியும் சாய்கோவின் மகளுமான 25 வயதுடைய மரியா பெரெட்ரி மூளைக் காயத்திற்கு ஆளானார். கடந்த ஜூன் மாதம் உக்ரைன் நிர்வாகத்தால் போர்க்குற்றவாளி என்று முத்திரை குத்தப்பட்டவர் தளபதி சாய்கோ.

இவர் ரஷ்யாவில் பல விருதுகளைப் பெற்ற போர் நாயககானக் கொண்டாடப்படும் நபராவார்; மேலும், Tu-95MS ரக விமானங்களைப் பயன்படுத்தி உக்ரைன் மீது நடத்தப்பட்ட கொடூரமான வான்வழித் தாக்குதலுக்குப் பின்னணியில் செயல்பட்டவரும் இவரே.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

2022-இல் உக்ரைன் மீதான புடினின் ஆரம்பக்கட்டப் படையெடுப்பின்போது, ​​கீவ் நகருக்கு அருகிலுள்ள புச்சாவில் குறைந்தது 450 பேர் கொல்லப்பட்டதோடு, அங்குப் பரவலாகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கூட்டுப் பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளை இவரது படைகள் மேற்கொண்டன; அக்காலகட்டத்தில் கீவ் முன்னணியில் ரஷ்யப் படைகளுக்குச் சாய்கோ (Chayko) தலைமை தாங்கினார்.

புச்சா படுகொலை என்பது இமோதலில் ரஷ்யா இழைத்த மிக மோசமான போர்க்குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இறப்புகள் குறித்த உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகாத நிலையில், ரஷ்யப் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புடைய 'சேனல் 112' (Channel 112) வெளியிட்ட தகவல்கள் இந்தக் கொடூரங்களை அம்பலப்படுத்தியுள்ளன.

இழைக்கப்பட்ட போர்க்குற்றம்

இதனிடையே, மாஸ்கோ காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், கிடைத்துள்ள தகவலின்படி, இரவு சுமார் 8.10 மணியளவில் பிரபலமான ஒரு உணவகத்திற்கு அருகே நிகழ்ந்த வெடிவிபத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட காயங்களுடன் தப்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புடினின் மிக இளம் வயது தளபதிகளில் ஒருவரான 39 வயதுடைய டிமிட்ரி மிகைலோவ், போர்க்களத்தில் FPV ட்ரோன் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்டதாக உக்ரேனிய தரப்பில் இருந்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிறந்தநாள் கொண்டாட்டம்... படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய புடினின் போர்த் தளபதி | Putin War Commander Survives

இசியும் (Izium) பகுதியில் ரஷ்யாவின் கொடூரமான ஆக்கிரமிப்பின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுடன் இவர் தொடர்புடையவர் என்று உக்ரேனிய விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போரில் டசினுக்கும் மேற்பட்ட ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். டிமிட்ரி மிகைலோவுக்கு 36 வயதாக இருந்தபோதே ஜனாதிபதி புடின் அவரை ஜெனரலாக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US