ஐரோப்பிய நாடுகளையும் கதற விடுவோம்: விளாடிமிர் புடினின் நண்பர் கொக்கரிப்பு
உக்ரைன் நாட்டை வெல்வது மட்டும் தங்களது திட்டமில்லை எனவும் பயனற்ற ஐரோப்பிய நாடுகளையும் வெற்றி கொள்ள வேண்டும் என கொக்கரித்துள்ளார் செச்சென் தலைவர் ரம்ஜான் கதிரோவ்.
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிக நெருங்கிய நண்பரும், அவரது கூலிப்படையாக செயல்படுபவருமான ரம்ஜான் கதிரோவ் தமது சமூக ஊடக பக்கத்திலேயே இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ நாடுகளுக்கு எதிராக போரிடுவது என்பது தமக்கு ஊக்கமருந்து போன்றது என குறிப்பிட்டுள்ள ரம்ஜான் கதிரோவ், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை விலக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதுடன், விளாடிமிர் புடினிடம் அவர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.
எங்கள் பின்னால் உறுதுணையாக எப்போதும் ரஷ்யா உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து உக்ரைனை வெற்றி கொள்வோம் என்றார்.
உக்ரைன் எங்களிடம் போரிடவில்லை, நேட்டோ நாடுகளை நாங்கள் வெற்றி கொள்வோம், மட்டுமின்றி நேட்டோ நட்பு நாடுகளுக்கும் பேரழிவு காத்திருக்கிறது என்றார்.
புடினையும் ரஷ்ய மக்களையும் அவதூறாக பேசிவரும் மேற்கத்திய நாடுகளை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடுகளின் துணையுடன் தாம் அமெரிக்கா வாலாட்டுகிறது எனவும், ரஷ்யா மீதான தடைகளை விலக்கி, மன்னிப்பு கோரும் வரையில் போர் தொடர வேண்டும் எனவும் ரம்ஜான் கதிரோவ் கொக்கரித்துள்ளார்.