அனாதையாக்கப்படுவோர் எண்ணிக்கை... துருப்புகளை திரும்ப அழைக்க புடினுக்கு நெருக்கடி
உக்ரைனில் பேரழிவை ஏற்படுத்தும் போரால் இதுவரை 30,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
துருப்புகளை திரும்ப அழைக்க இன்னும் தாமதமானால் அனாதைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என விளாடிமிர் புடினுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய துருப்புகள் இதுவரை 30,000 வீரர்கள் மற்றும் 207 விமானங்கள், 174 ஹெலிகொப்டர்களை உக்ரைன் போரில் இழந்துள்ளது.
மட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் Avdiivka மற்றும் Kryvyi Rih முனைகளில் கடும் பின்னடைவை ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க, பிரித்தானிய தன்னார்வலர் வீரர்கள் ரஷ்ய இராணுவ டாங்கி ஒன்றை சிதறடிக்கும் காணொளி ஒன்றை உக்ரைன் தரப்பு வெளியிட்டுள்ளது.
இதனிடையே மூத்த அரசியல்வாதி ஒருவர் விளாடிமிர் புடினுக்கு முன்வைத்த கோரிக்கையில், போர் தொடர்பில் ரஷ்யாவில் எழும் குழப்பங்களை தீர்க்க துருப்புகளை திரும்ப அழைக்க வேண்டும் என்றார்.
மட்டுமின்றி, போரினால் காயம்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கொல்லப்பட்ட வீரர்களால் அவர்களின் குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுருந்தார்.
இது புடின் ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளதுடன், இராணுவத்தின் மதிப்பை இழிவு செய்துள்ளார் என கூறி துரோகி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த மூத்த அரசியல்வாதி தற்போது சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார்.