ஜேர்மனி செல்ல வேண்டாம் - ரஷ்யர்களுக்கு புடின் எச்சரிக்கை
ரஷ்யா, தனது குடிமக்கள் ஜேர்மனிக்கு பயணம் செய்ய வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
“மிக அவசியமான சூழ்நிலை தவிர, ஜேர்மனி செல்லாதீர்கள்” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்ய வெளிவிவகாரத் துறையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, ஜேர்மனியில் ரஷ்யர்களுக்கு துன்புறுத்தல், சோதனை, தனிப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள் காரணமாக நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
“ஜேர்மனி, ரஷ்யர்களுக்கு நீதியற்ற பிரதேசமாக பிரதேசமாக ஆகிவிட்டது” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சம்பவங்கள்
சாதாரண பயணிகள் மட்டுமல்லாமல், பிரபலங்களும் ஜேர்மனியில் அவமானகரமான சோதனைகளுக்கு உள்ளாகியுள்ளனர் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
விமான நிலையங்களில், ரஷ்யர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜேர்மனியின் பதில்
இதுவரை ஜேர்மன் அதிகாரிகள், ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கவில்லை.
ஆனால், இந்த எச்சரிக்கை, ரஷ்யா-ஜேர்மனி இடையிலான தூதரக பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
விளைவுகள்
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, ஐரோப்பிய நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் சிக்கலாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜேர்மனியில் வசிக்கும் ரஷ்யர்கள் மற்றும் அங்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள், இப்போது பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Putin warns Russians Germany unsafe travel advisory, Russia accuses Germany harassment confiscation sanctions, Maria Zakharova German airports Russians mistreated, Russia Germany diplomatic tensions NATO nation warning, Russian citizens avoid Germany unless necessary, EU sanctions impact Russian travelers Germany airports, Moscow travel alert Germany lawless territory claim, Germany response Russia allegations diplomatic silence, Russia Germany relations 2025 latest news update, Putin statement NATO tensions Europe Russia travel ban