ரஷ்யா ஜனாதிபதியின் சிலையை வெளியேற்றிய பிரான்ஸ் அருங்காட்சியகம்
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Grévin அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
ரஷ்யா சர்வதேச விதிமுறைகளை மீறி உக்ரைன் மீது போர்தொடுத்துவருவதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் பொருளாதரா தடை உட்பட பலவகையான தடைகளை ரஷ்யா மீது தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் உள்ள Grévin அருங்காட்சியகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் சீன ஜனாதிபதி ஜிங்பிங் ஆகியோரின் மெழுகு சிலைகள் வரிசையில் வைக்கப்பட்டு இருந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
VIDEO: Wax statue of Vladimir Putin removed from Paris museum.
— AFP News Agency (@AFP) March 3, 2022
Russia's invasion of Ukraine prompts director of the Grevin Museum in Paris to remove the statue.
"We have never represented dictators like Hitler in the Grevin Museum, we don't want to represent Putin today" pic.twitter.com/vaN3kOPPzP
மேலும் ரஷ்ய ஜனாதிபதியின் மெழுகு சிலை இருந்த வரிசையில், புதிதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகு சிலை வைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு குறித்து பேசிய Grévin அருங்காட்சியகத்தின் இயக்குனர் Yves Delhommeau, எங்கள் அருங்காட்சியகத்தில் எப்போதும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளின் மெழுகு சிலைகள் இடம் பெறுவது இல்லை.
அதன் அடிப்படையில் தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் சிலையும் அகற்றப்பட்டுள்ளது.
மேலும் இந்த அருங்காட்சியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மெழுகு சிலையை கடந்து செல்ல விரும்பவில்லை எனவும் AFP செய்தி நிறுவனத்திடம் Delhommeau தெரிவித்துள்ளார்.
கடந்த 2000 மாவது ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மெழுகு சிலையை உருக்கப்போவது இல்லை எனவும், அதனை அருங்காட்சியகத்தின் கிடங்கில் வைத்து பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.