ரஷ்யா உக்ரைன் போரில் வென்றால் அடுத்து இந்த நாட்டை புடின் தாக்குவார்: வெளியாகியுள்ள பகீர் தகவல்
ரஷ்யா உக்ரைன் போரில் வென்றால், அடுத்து புடின் பிரித்தானியா மீது போர் தொடுப்பார் என்கிறார் ரஷ்ய செல்வந்தர் ஒருவர்.
புடினையும் அவரது ஆட்சியையும் நீண்ட காலமாக விமர்சிப்பவரான Mikhail Khodorkovsky, 2015 முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார்.
உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த அவர், உக்ரைனில் தற்போது நடக்கும் பிரச்சினையை நாம் சரியாக கையாளவில்லையென்றால், அந்த பிரச்சினை மற்ற நாடுகளுக்கும் பரவும் என்று கூறுகிறார்.
புடின் இந்தப் போரில் தோற்கப்போவது உறுதி, ஆனால், ஒருவேளை அவர் வெற்றிபெற்றுவிட்டால், உள்நாட்டில் நிலவும் பிரச்சினைகள் காரணமாக அவர் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவுடன், அதாவது, நேட்டோவுடன் போர் துவக்குவார் என்று கூறும் Khodorkovsky, அவர் அந்தப் போரிலும் தோல்வியைத் தழுவுவார் என்று கூறியுள்ளார்