பிரான்ஸ் தேரதல்: மக்ரோன் நல்ல வாழ்வு மற்றும் நல்ல உடல் நலத்துடன் இருக்க புடின் வாழ்த்து!
செய்தி சுருக்கம்:
- பிரான்ஸ் ஜனாதிபதியாக இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையாக தேர்வு.
- மக்ரோன் நல்ல ஆட்சி, நல்ல வாழ்வு மற்றும் நல்ல உடல் நலத்துடன் இருக்க புடின் வாழ்த்து.
- உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தையில் மக்ரோன் மீண்டும் இறங்கலாம் என எதிர்பார்ப்பு.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற இம்மானுவேல் மக்ரோனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் டெலிகிராம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 10ம் திகதி மற்றும் ஏப்ரல் 24ம் திகதி என இரண்டு கட்டங்களாக நடைப்பெற்று முடிவடைந்துள்ளது.
இதில் மையக்கருத்து கொள்கை கொண்ட இம்மானுவேல் மக்ரோன் 58.55 சதவிகித வாக்குகளும் (Emmanuel Macron) தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட மரைன் லு பென் 41.45 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளனர், இவற்றில் எதிர்பார்க்கப்பட்ட வாக்கு வித்தியாசத்தை விட ஜனாதிபதி மக்ரோன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 20 ஆண்டுகளில் தொடர்ந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஜனாதிபதி என்ற சாதனையை மக்ரோன் படைத்துள்ளார்.
இந்த நிலையில், உக்ரைன் ரஷ்யா இடையே நிலவிவரும் பதற்றத்தை குறைக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்ட இம்மானுவேல் மக்ரோனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரது வாழ்த்துகளை தெரிவித்திள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு பணத்தை வாரி வழங்கிய அமெரிக்கா...புடின் குறிக்கோளில் தோற்றுவிட்டார்: பிளிங்கன் கருத்து!
இம்மானுவேல் மக்ரோனுக்கு டெலிகிராம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி புடின், பிரான்ஸ் நாட்டின் அரசியல் நடவடிக்கை, நல்ல வாழ்வு மற்றும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேரதல் காரணமாக நீண்ட நாள்களாக உக்ரைன் ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தைகளில் தலைகாட்டமல் இருந்த ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது இந்த வரலாறு வெற்றிக்கு பிறகு மீண்டும் போர் நிறுத்த நடவடிக்கையில் இறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்திக்கான வளம்: BBC