ஈரானை மொத்தமாக கைவிடும் புடின்... நெதன்யாகு முன்வைக்கும் கோரிக்கை
அமெரிக்காவும் இஸ்ரேலும் குண்டுவீச்சு நடத்தத் தொடங்கினால், விளாடிமிர் புடின் ஈரானைப் பாதுகாக்க மாட்டார் என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு உதவ
ஈரானின் அதிரவைக்கும் அணுசக்தி திட்டம் தொடர்பாக உச்ச தலைவர் அயதுல்லா காமெனியுடன் லிபியா பாணி தீர்வை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரியுள்ள நிலையிலேயே, ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ தெளிவுபடுத்தியுள்ளார்.
திங்களன்று ஓவல் அலுவலகத்தில் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்த ட்ரம்ப், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை தொடங்கும் என்று அறிவித்தார்.
ஆனால், அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதலின் கீழ் ஈரானுக்கு உதவ ரஷ்யா கடமைப்படவில்லை என்றே ஆண்ட்ரி ருடென்கோ தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், அத்தகைய தாக்குதல் அந்தப் பிராந்தியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றே ஆண்ட்ரி ருடென்கோ எச்சரித்துள்ளார்.
ஏற்றுக்கொள்ளப்படும்
மேலும், ஈரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் தேவையான எந்த உதவியையும் ரஷ்யா வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ட்ரம்புடன் நடந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஈரானுக்கு லிபியா பாணி தீர்வு காணப்பட வேண்டும் என்று நெதன்யாகு கோரியுள்ளார். மேலும், ஈரானுக்கு கண்டிப்பாக அணு ஆயுதங்கள் தேவை இல்லை என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
2003ல் லிபியாவுடன் ஏற்பட்டதைப் போலவே இருந்தால் மட்டுமே ஒரு ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் நிபுணர் ஹமித்ரேசா அஸிஸி தெரிவிக்கையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஈரானியத் தலைவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |